ஈரோடு வெள்ளாங்கோவில் திமுக ரஞ்சித் துடுப்பதியில் மது விற்பனையில் சாதனை ஆளுங்கட்சி பேரில் அதிகாரிக்கு மிரட்டல்!

ஈரோடு மாவட்டம் துடுப்பதி அரசு மதுபான கடையை வெள்ளாங் கோயில் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ரஞ்சித் பார் நடத்தும் உரிமை பெற்றுள்ளார் . ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் அதிகாரிகளுக்கு பயப்படாமல் தைரியமாக 24 மணி நேரமும் பல மடங்கு விலையில் மதுபானம் விற்று வருகிறார் மேலும் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் திம்பம் மலைப்பகுதி வழியாக மதுபானம் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனையில் லட்சக்கணக்கில் வருமானம் வருவதால் பல்வேறு வழக்கு வாங்கினாலும் துளியும் அச்சப்படாமல் சட்ட விரோதமாக மது விற்று வருகிறார் . தமிழகத்தில் மதுவிலக்கு மெல்ல மெல்ல கொண்டுவரப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறிவரும் நிலையில். அப்பாவி தொழிலாளிகளை குறிவைத்து 24 மணி நேரமும் மதுவிற்கும் திமுக பிரமுக ரஞ்சித் மீது தலைமை நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.