எழும்பூர் ஆதி பொன்னியம்மன் கோவில் குடமுழுக்கு நீராட்டு பெருவிழா!

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் உள்ள ஆதிபுரீஸ்வரர் பொன்னியம்மன் திருக்கோவில் விமரிசையாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பொறுப்பில் இருக்கின்ற கோவில் குருக்கள் ராமச்சந்திரன், பழனிநாதன் மற்றும் நிர்வாக அறங்காவல் குழுவில் உள்ளவர்கள் சிறப்புடன் செய்திருந்தனர். குடமுழுக்கு பெருவிழாவை ஆன்மீக வர்ணனையாளர் மணிமங்கலம் மைக் மோகன் தொகுத்து வழங்கினார். ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனின் அருள் பெற்று சென்றனர்.