தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது தேனி பழைய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினிமாரத்தான் ஒட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த மாரத்தான் ஓட்டமானது தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரியகுளம் ரயில்வே சாலை, NRT நகர் ,புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்குவரை சென்றது மேலும் இந்த மரத்தின் ஓட்டமானது பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொது பிரிவினர் என்று மூன்று வகையாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் . மேலும் இந்த நிகழ்வில் கலால்துறை அலுவலர் ரவிச்சந்திரன் ,மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், விளையாட்டு வீரர்கள் ,ஆசிரியர்கள் ,பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.