தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2005 ஆம் ஆண்டில் உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 600 படுக்கை வசதிகளுடன் துவங்கி, தற்போது 1300 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றும் அளவில் மருத்துவமனை யின் கட்டமைப்பு விரிவுபடுத்த பட்டு, 180 மருத்துவர்கள், 380 செவிலியர்கள், 400 பணியாளர் களுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு பொது நல பிரிவு , தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தனித்தனி அறுவை அரங்கம், குழந்தைகள் நலப் பிரிவு, மகப் பேறு பிரிவு, இரத்த வங்கி, ஸ்கேன் சென்டர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு ஆய்வகம் உள்ளிட்ட பிரிவுகளும் உள்ளன. இந்த நிலையில் வார்டு எண் 703 ல் மயக்கவியல் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வந்த அறையை தீவிர சுவாச சிகிச்சை பிரிவு அறையாக மாற்றப்பட்டு கல்லூரி முதல்வர் பாலசங்கர் தலைமையேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது முதல்வர் கூறுகையில், தீவிர சுவாச சிகிச்சை பிரிவில் அதிநவீன 10 படுக்கைகள், செயற்கை சுவாச கருவிகள் 10, மல்டி பாடி மானிட்டர் கருவிகள் 10, ஆக்ஸிஜன் சேமிப்பு கிடங்கில் இருந்து நோயாளிகளுக்கு நேரடியாக பிராண வாயு சுவாசிக்கும் கருவிகள் 10, சளியை நவீன கருவி மூலம் உறிஞ்சி எடுக்கும் கருவிகள் 10, இதயம் செயலற்ற போது கரண்டு சாக் வைத்து இதய துடிப்பை மீட்டு எடுக்கும் கருவிகள் 10, நோயாளியின் நோயின் தன்மையை அறிந்து, மிகத் துல்லியமாக கால அளவிற்கு ஏற்றார் போல் மருந்து செலுத்தும் அதிநவீன கருவிகள் 10, எக்ஸ்ரே என அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ உபகரணங்கள் உள்ள பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற திறக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அவர் கூறுகையில், நாள் ஒன்றுக்கு 6 டூ 7 பேரும், மாதத்திற்கு 150 பேர் விஷம் அருந்தி சிகிச்சைக்காக வருகின்றனர். அதில் சராசரியாக 25 பேர் உயிரிழக்கின்றனர். பாம்பு கடித்து நாள் ஒன்றுக்கு 2-3 பேர் என மாதத்திற்கு 60-70 பேர் சிகிச்சைக்காக அனுமதிக் கின்றனர். அதில் சராசரியாக 4 பேர் உயிரிழக்கின்றனர். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் செல்வகுமார், மருத்துவ நிலைய அலுவலர் சந்திரா, மயக்கவியல் துறை பேராசிரியர் கண்ணன் போஜராஜ், துணைத் தலைவர் கணேசன் பிரியர் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.