தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் தேனியில் செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆப் தேனி ஸ்டார்ஸ் சார்பில் தலைவர் மருத்துவர் கல்பனா தேவி தலைமையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா!

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் தேனியில் செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆப் தேனி ஸ்டார்ஸ் சார்பில் தலைவர் மருத்துவர் கல்பனா தேவி தலைமையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் தேனி ஸ்டார்ஸ் செயலாளர் நிறைமதி பொருளாளர் ப்ரிதா கொசி மற்றும் சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து வைத்து பேசிய மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, இந்தக் கோவிலுக்கு வரும் இளம் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை மிகவும் உதவியாக இருக்கும் மேலும் இதுபோன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பொது மக்களுக்கு பயன்பெறும் உதவிகளும் ரோட்டரி கிளப் ஆப் தேனி ஸ்டார்ஸ் செய்து வருகின்றனர் என்று பேசினார் .இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் தாய்மார்கள் பாலூட்டும் அறை திட்டத்தின் தலைவரும் நன்கொடையாளருமான ஸ்ரீவித்யா பாலாஜி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தேனியின் உறுப்பினர் பாலாஜி ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் துணை ஆளுநர் ஜெயவீரன் ,மாவட்ட செயலாளர்களான சௌந்திரபாண்டியன் , சண்முகவேல் ,ஜெயமணி,மனோகரன், மகேந்திரன், கோயில் நிர்வாகிகள்,மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.