விடுதலைப் போராட்ட வீரரான சிங்கம் செட்டியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேனியில் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

விடுதலைப் போராட்ட வீரர் சிங்கம் செட்டியார் அவர்களின் 225வது நினைவு நாள் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட சிங்கம் செட்டியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவரின் திரு உருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி நகராட்சி அலுவலகம் அருகே சிங்கம் செட்டியார் அவர்களின் உருவப் படத்தை வைத்து அவருக்கு மலர் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் பாஜக, அதிமுக, ஃபார்வர்டு பிளாக், உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்ட சிங்கம் செட்டியாரின் திரு உருவப்படத்திற்கு மலர்களை தூவி அவரின் புகழை கூறி வீரவணக்கம் வீரவணக்கம் என்ற கோஷங்களை எழுப்பி மரியாதை செலுத்தினர்.