ஆனந்தமய நாட்டியாலயாவின் மாணவி ஆர். டி. ஹன்சிகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்!

சென்னை ஜெமினி மேம்பாலம் அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் ஆனந்தமய நாட்டியாலயாவில் பயின்ற மாணவியும் ரமேஷ்- தேவி தம்பதியரின் புதல்வியுமாகிய ஆர்.டி. ஹன்சிகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுப்பிரமணியசாமி, வாதவூரடிகள், முத்துகிருஷ்ணன், மோகன கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர் ஆர்த்தி கார்த்திகேயனை குருவாக கொண்டு நடனமாடிய ஹன்சிகா விநாயகர் வணக்கம் தேவி சப்தம், தில்லானா உள்ளிட்ட தலைப்புகளில் நடனமாடியது காண்போரை பரவசப்படுத்தியது. கடந்த 9 வருடங்களாக பரதநாட்டிய பயிற்சி பெற்ற ஆர்.டி. ஹன்சிகாவின் நடனத்தைக் காண அரங்கம் நிறைந்த ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.