ஈரோடு மாவட்டம் கோபி,திங்களூர், அந்தியூரில் இரவு பகலாக மண் திருடும் குமார் மற்றும் வீனித்..... அடிக்கடி ஏற்படும் விபத்தால் பொதுமக்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாங்கோவில் ஊராட்சி பகுதியில் உள்ள தொன்னாரி பாளையம் கிராமத்தில் குமார் மற்றும் வீனித் என்பவர்கள் முக்கிய புள்ளிகளுடன் கைகோர்த்து விவசாய நிலங்களில் அரசு அனுமதி இன்றி இரவு பகலாக அளவுக்கு அதிகமாக கிராவல் மண் கடத்தி வருகிறார். விவசாய நிலங்களில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழமாக மண் தோண்டப்பட்டு கடத்தப்பட்டுள்ளது . இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மண் கொள்ளை நடப்பதாகவும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில், வெள்ளிதிருப்பூர் , சென்னம்பட்டி , கொமராயனூர் , பாப்பாத்திகாட்டுப்புதூர் , சங்கராப்பாளையம் , பூலேரிக்காடு மற்றும் கோபி சுற்று பகுதி, அம்மாபேட்டை சத்தியமங்கலம், டி.என் பாளையம் ஆகிய பகுதியில் தனியார் நிலங்களில் அரசு அனுமதியின்றி டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் மண் அதிக ஆழம் தோண்டி அள்ளுவதால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு செல்வதாகவும், மணல் கொள்ளையை தடுக்க புகார் பல வந்தாலும் வருவாய்த்துறை அதிகாரிகள் மண் திருடும் நபர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கொள்ளையை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக கூறப்படுகின்றது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான மண் லோடு டிராக்டர் , டிப்பர் லாரிகள் முலம் கடத்தப்படுகிறது. நிலத்தின் மேல் பகுதியில் உள்ள வண்டல் மண்ணை செங்கல் சூளைகளுக்கும், அதன் அடியில் சிலரது நிலத்தில் 40 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்படும் மணலை அங்கேயே சல்லடை வைத்து சலித்து வீடு கட்டுமானத்துக்கு ஏற்ற வகையில் ஏற்றி சென்று சப்ளை செய்யப்படுகிறது. எந்தவித அனுமதி இன்றி செங்கல் சூளைக்கு மண் அதிக அளவில் கடத்த படுகிறது. மண் திருடும் குமார் , வீனித் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மற்றும் துணை போகும் அதிகாரிகள் மீது ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாய நிலத்தை காப்பாற்றி வேளாண்மையை வளர்க்க முடியும்.