கடலோர மீன் அங்காடி காணொளி வாயிலாக திறப்பு!

சென்னைநொச்சிக்குப்பம்லூப் சாலையில் மீனவர்கள் தங்கள் மீன்களை விற்றுக் கொள்ள வசதியாக நவீன மீன் அங்காடியை முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். 4 ஆயிரத்து 645 சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் 366 கடைகள் மீனவர்கள் பயன்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. மீன்களை வெட்டி சுத்தம் செய்வதற்கென்று தனித்தனி இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது இந்த அங்காடியின் சிறப்பம்சமாகும். தற்போதைக்கு 332 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கடைகளுக்கான நபர்களை ஒதுக்கீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அங்காடி திறப்பு விழாவில் மயிலை பகுதி திமுக மாவட்ட செயலாளர் வேலு பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக கழக முன்னணி பிரமுகர்கள் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனர்.