கோவை நாரணாபுரம் ஊராட்சியில் சுமார் ரூ. 13 லட்சம் மெகா ஊழல்! கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் நாரணாபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். ஈஸ்வரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே. பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி செயலர் மூர்த்தி ஆகியோர் இணைந்து கடந்த நான்கு மாதங்களில் சுமார் 13 லட்சம் வரை ஊழல் புரிந்துள்ளனர் என்று 6 கவுன்சிலர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து 3-வது வார்டு கவுன்சிலர் ஏ. பழனிச்சாமி கூறுவதாவது: எங்கள் ஊராட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து டிசம்பர் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை பொது சுகாதாரம் குடிநீர் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொண்டதாக ரூ13 லட்சம் வரை போலி பில் போடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதை அறிந்த என்னோடு இணைந்த மொத்தம் 6 கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், ஊராட்சிகளின் தணிக்கைத் துறை உதவி இயக்குனர் என்று புகார் மனு கொடுத்துள்ளோம். மாவட்ட ஊராட்சி செயலரிட மும் முறைப்படி தகவலைக் கூறினோம் இதுவரை எந்தப் பலனும் இல்லை எனவே நானும் என்னுடன் இணைந்த 5 கவுன்சிலர்களும் மொத்தம் 6 கவுன்சிலர்கள் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேற்படி கூறப்பட்ட ரூபாய் 13 லட்சம் ஊழலுக்கு சரியான விளக்கத்தினை தலைவரும், துணைத் தலைவரும் அளிக்க வேண்டும் அதேபோல கடந்த நான்கு வருடங்களில் பொதுநிதியிலிருந்து சுமார் ரூ 2 கோடிக்கும் மேல் மாயமான கணக்கு வழக்கு விவரங்களையும் எங்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளித்தாக வேண்டும். அதுவரை நாங்கள் அலுவலக செயல்பாட்டினை நிறுத்தி வைப்போம் என்றார். 3-வது வார்டு கவுன்சிலர் ஏ.பழனிச்சாமி, 2-வது வார்டு கவுன்சிலர் எஸ்.சுமதி, 5-வது வார்டு கவுன்சிலர் கௌசல்யா, 6-வது வார்டு கவுன்சிலர் மேனகா,7-வது வார்டு கவுன்சிலர் விமலா ராணி, 8-வது வார்டு கவுன்சிலர் ராஜாமணி ஆகியோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.