கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடத்தினர்.
கோடை வெயிலினால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மழை பெய்யாமல் மக்கள் சிரமப்படுவதாலும் பவானிஆற்றிலே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை மேட்டுப்பாளையம்அனைத்து பள்ளி கூட்டமைப்பான ஐக்கிய ஜமாஅத் பேரவையின் சார்பாக இன்று காலை சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் அமைந்துள்ள ரோஸ் கார்டன் மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் மழை வேண்டி சிறப்பு தொழுகையும் பிரார்த்தனையும் நடைபெற்றது இந்த நிகழ்விலே மேட்டுப்பாளையத்தின் அனைத்து பள்ளிவாசல் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர் சின்ன பள்ளிவாசல் ஹஜரத் மிஹ்யத்தீன் சிராஜி அவர்கள் சிறப்பு தொழுகையும் பிரார்த்தனையும் செய்தார் இந்நிகழ்வில் மேட்டுப்பாளையத்தின் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் உலமா பெருமக்கள் கலந்து கொண்டனர் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வை மேட்டுப்பாளையம் அனைத்து பள்ளிவாசல்களின் தன்னார்வலர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் காட்டூர் பள்ளிவாசல் இமாம் முஹம்மது இல்யாஸ் பாகவி அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.