திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமியின் அதிரடி!!! டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் திண்டாட்டம்! பெண்கள் மற்றும் தொழிலாளி குடும்பத்தினர் கொண்டாட்டம்!

திருப்பூர் மாநகரில் இது நாள் வரை தொடர்ந்து 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக லட்சுமி பொறுப்பேற்றவுடன் பெண்கள் ,மாணவ, மாணவிகள், தொழிலாளி குடும்பத்தினர் உற்சாகம். திருப்பூர் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் டாலர் சிட்டி ஆகும். தொழிலாளிகள் நிறைந்த குடியிருப்புகள், சாய அழை பனியன் கம்பெனி மற்றும் தொழில்சாலைகள் , மருத்துவமனை, கல்வி கூடங்கள் , வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால். 24 மணி நேரமும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் 24 மணி நேரமும் நடமாடுவது வழக்கம். காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகம் அளவு செல்வார்கள் . வாகன போக்குவரத்தும் அதிகப்படியாக இருக்கும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பல டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அரசு டாஸ்மார்க் கடையில் உள்ள பாரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்கள் இரு மடங்கு விலையில் அமோகமாக விற்பனையாகி வந்தது. எந்த நேரமும் சரக்கு கிடைப்பதால் முழு நேர குடிகாராக மாறும் தொழிலாளிகள் சரக்கு அடித்து விட்டு அந்த அந்த பகுதியில் உள்ள கோவில், மரத்தின் அடியில் , ரோட் டோரங்களில் ஹாயாக படுத்து உறங்க காட்சி காணப்பட்டது. பொது இடங்கள் குடிமகன்களின் பொழுதுபோக்கு கூடாரமாக இருந்து உள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையராக லட்சுமி பொறுப்பு ஏற்றதிலிருந்து அப்படி எந்த காட்சியும் காணப்படவில்லை என்று பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். புதிதாக பொறுப்பு ஏற்ற திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி அவர்கள் பெண்களின் வேதனைகள் புரிந்து . 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்து வந்ததை கட்டுப்படுத்து விட்டார். உண்மையில் திருப்பூர் மாநகரம் மது இன்றி சுதந்திர தினம் கொண்டாடியது நேற்றுதான். என்று பொதுமக்கள் பெண்கள் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.