தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தில் பள்ளி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் அருகே அரசு மதுபான கடை!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே ரங்கநாதபுரம் கரட்டுப்பட்டி கிராமத்திற்கு நடுவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது கடைகளுக்கு அருகே பள்ளிகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வந்த நிலை இந்த மதுபான கடையால் அப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு மது பிரியர்கள் அவ்வழியே செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்புகளை அடுத்து அரசு மதுபான கடை அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே இடத்தில் புதிதாக தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான பார் திறக்கப்படுவதாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் குடியிருப்பு அருகில் மதுபான கடை திறக்கக் கூடாது என பொதுமக்கள் மற்றும் அந்தப் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த இடத்தில் மதுபான பார் செயல்படுவதற்கான கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தங்கள் ஊர்களில் சுவரொட்டிகளை ஒட்டி எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரெங்கநாதபுரம் கிராமம் அருகே ராணி மங்கம்மாள் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியைச் சேர்ந்த முதல்வர் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபான கடை செயல்பட்டு வருவதால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மதுபான கடையை செயல்பட அனுமதிக்க கூடாது என கோரிக்கை மனுவை அளித்தனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களின் கையெழுத்துடன் அந்தப் பகுதியில் மதுபான கடை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வழங்கப்பட்டது. பேட்டி - சதிஷ் ( தனியார் பள்ளி முதல்வர் )