தேனியில் முதல்முறையாக புல் தரை ஆடுகளத்துடன் தொடங்கப்பட்ட கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் அகாடமியை பாரதிராஜா பட நடிகரும் தொழிலதிபருமான லக்ஷ்மன் நாராயணன் தொடங்கி வைத்து அவர்களுடன்...
தேனியில் முதல்முறையாக புல் தரை ஆடுகளத்துடன் தொடங்கப்பட்ட கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் அகாடமியை பாரதிராஜா பட நடிகரும் தொழிலதிபருமான லக்ஷ்மன் நாராயணன் தொடங்கி வைத்து அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்
தேனியில் தவம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவர்களுக்கான ஸ்போர்ட்ஸ் அகாடமி தேனி புதிய பேருந்து நிலையம் பின்புறம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
தேனியில் முதல்முறையாக டர்ப்(turf) ஆடுகளத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த அகாடமியை பாரதிராஜா திரைப்படத்தின் நடிகரும் தொழிலதிபருமான லட்சுமண் நாராயணன் தொடங்கி வைத்தார். அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றி கிரிக்கெட் விளையாடி பயிற்சி ஆடுகளத்தை தொடங்கி வைத்தார். மேலும் கோடை காலத்தில் மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இந்த பயிற்சி மையத்தில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அகாடமியின் உரிமையாளர் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி நகராட்சி துணை சேர்மன் செல்வம், அமமுக மாவட்ட செயலாளர் காசிமாயன், மற்றும் தொழிலதிபர்கள் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.