பத்திரிக்கை நிறுவன ஆசிரியர் மீது கொடூர தாக்குதல்

வேலூர் மாவட்டம், வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் நடத்தி வரும் சேட்டு என்பவர் செய்து வரும் வேலைகளை செய்தி மற்றும் புகைப்படம் எடுக்க நான்கு திசை விடியல் பத்திரிகையின் ஆசிரியர் லட்சாபதி அந்த பகுதிக்கு சென்றார். அவரை சேட்டு மற்றும் அவருடன் சேர்ந்து அடியாட்கள் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தூண்டுதலின் பேரில் அவரை தரக்குறைவாக பேசியதோடு கண்மூடித்தனமாக கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டீர்கள் என்றும் பத்திரிகை ஆசிரியர் ரூபாய் 15,000 பணம் கேட்டதாகவும் கூறி பத்திரிகை ஆசிரியர் மீது மிரட்டல் விடும் வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்துள்ளனர். இந்த சமூக விரோதிகள் இது குறித்து தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெற்கு போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசை பணிநீக்கம் செய்யவும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றவோ பரிந்துரை செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரது செய்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். செய்தி சேகரிக்க செல்லும் இடத்தில் பணி பாதுகாப்பு இல்லை என்பதை குறிப்பிட்டு இந்த சம்பவம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசும் இது போன்ற பிரச்சனைகளில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். ஏனென்றால் இது போன்ற சமூக விரோதிகள் காவல்துறைக்கு மாமூல் செலுத்துகின்றனர். பத்திரிகையாளர்களால் ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை என்பதால் செய்தியாளர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் நிலைக்கு இன்றைய சூழல் கொண்டு போய் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்றுமே நீதி வெல்லும் சத்தியம் ஜெயிக்கும் என்பதற்கு இதிலேயும் ஒரு நியாயம் கிடைக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.