அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் விபத்தில்லா சென்னை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சென்னை போக்குவரத்து காவல்துறை சமீப காலமாக "ஜீரோ பிரசன்ட் ஆக்சிடென்ட் ஆகஸ்டு- 26", என்ற தலைப்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதாவது வருகிற 26- ஆம் தேதி விபத்து இல்லாத சென்னையை உருவாக்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்! பிறகு படிப்படியாக அனைத்து நாட்களிலும் விபத்தில்லா சாலை போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு இம்மாதிரியான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களுக்கான விபத்தில்லா சென்னை விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை போக்குவரத்து காவல்துறை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்தோஷ் பாபு தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மகேஷ் குமார் ஐபிஎஸ், சி. கே. ரவி, பி.குமார் மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஏ. ரமேஷ் ஆகியோர் விழிப்புணர்வு கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினர். கல்லூரி மாணவ - மாணவிகளின் சார்பில் ராஜமூர்த்தி மற்றும் கோடீஸ்வரி ஆகியோர் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு எனும் தலைப்பில் பேசினர். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் கருணாகரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக என். எஸ். எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த உயர் அதிகாரிகளை அணிவகுப்பு மரியாதை யுடன் வரவேற்றனர். முடிவில் முனைவர் ஜெயராம் நன்றியுரை ஆற்றினார்.