ஈரோடு மாவட்டம் விண்ணப்பள்ளியில் லஞ்ச அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி கோடிக்கணக்கான கனிமங்கள் திருடும் கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் குடியிருக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விண்ணப்பள்ளி ஊராட்சியில் குரும்பபாளையம் கிராமத்தில் ப்ளு ஸ்டார் , சாய் மைனிங் மற்றும் சில கல்குவாரிகள், கிரஷர்கள் விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் செயல்பட அனுமதி வழங்க கூடாது என்று ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தும். அமைச்சர் மற்றும் பல்வேறு துறையின் மேலதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கி செயல்பட்டு வருகிறது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வழித்தடம் அமைத்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கோடிக்கணக்கான கனிமங்கள் 24 மணி நேரமும் கடத்தப்படுகிறது இவைகள் அனைத்தும் அரசு வழிகாட்டுதல் படி இல்லாமல் அதிக ஆழமாகவும் அச்சுறுத்தும் வகையில் நவீனமான வெடிபொருள்கள் கொண்டு உடைத்தும். அரசுக்கு சிறிது பணம் கட்டி விட்டு போலியான ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கான மதிப்பில் கனிமங்களை தமிழக மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய பகுதியில் கடத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தில் இல்லாத கனிமம் வளங்களா , பிறகு ஏன் தமிழகத்தில் இருந்து கனிமம்களை அதிக தொகை செலவு செய்து தமிழகத்தில் இருந்து கொண்டு செல்ல படுகிறது. காரணம் அங்கு விதிமுறைகள் கடுமையாக உள்ளது, அதிகாரிகள் நேர்மையாக உள்ளார்கள். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் ஒற்றுமையாக உள்ளார்கள். ஆனால் தமிழகத்தில் ஊழல் அரசியல்வாதிகள் , லஞ்ச அதிகாரிகளால் எவ்வித கெடுபிடியும் கிடையாது ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்பது போல் விவசாயிகள் புலம்பல் அரசு காதுக்கு கேட்காது, பாதிப்பு குறித்து அருகே குடியிருக்கும் விவசாயி பொன்னுச்சாமி கண்ணீருடன் கூறுகையில் பல தலைமுறையாக இங்கு விவசாயம் செய்து வந்தோம், எங்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது . இந்த நிலத்தில் பல்வேறு விவசாயம் பொருள்கள் சாகுபடி செய்து வந்தோம். கொரோனா பாதிப்பு காலத்தில் நாடே அமைதியாக இருந்த பொழுது எங்கள் பகுதியில் கல்குவாரி ,கிரஷர்கள், சிமென்ட் ரெடிமிக்ஸ் , தார் தயாரிக்கும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு எதுவும் இன்றி முறைகேடுகளாக அனுமதி பெற்றுள்ளது. இவர்கள் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும், வனத்துறை இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து கனிம வளத்தை பெரும் அளவில் கடத்தி வருகிறார்கள். பல்வேறு கட்டமாக தாசில்தார் ,ஆர்டிஓ, கலெக்டர், ஒன்றிய சேர்மன், எம் .எல். ஏ, அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் என பல்வேறு புகார் அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை. 24 மணி நேரமும் பிரமாண்டமான குழியில் அளவுக்கு அதிகமான வெடிபொருட்கள் வைத்து வெடி வெடிப்பதும் , கிரசர் ஓடுவதால் இந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக உள்ளது. வெடி வெடிக்கும் சத்தத்தில் ஆடு ,மாடுகள் மிரண்டு கிணற்றில் தவறி விழுவது வாடிக்கையாக உள்ளது. வனவிலங்குக்கான மான், மயில் ,காட்டுப்பன்றிகள் பயந்து குடியிருப்புகள் நுழைவதும் அவ்வப்போது நடைபெறுகிறது. சில மணி நேரத்தில் எந்த பொருளை வைத்தாலும் அந்த பொருள் கிரசர் மண் போர்வை போல் மூடிவிடும். நன்றாக சுவாசிக்க முடியாது, கண் திறந்து பார்க்க முடியாது, எப்பொழுதும் அதிக இறச்சலுடன் இருப்பதால் ஓய்வு எடுக்க முடியாது. விவசாயம் தான் அழிந்துவிட்டது என்று ஆடு, மாடு, கோழி கூட மேக்க கூட இந்த பகுதி ஏற்றதாக இல்லை. 10 ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்து நன்றாக வாழ்ந்த எங்கள் குடும்பம் தற்பொழுது கட்டிட வேலைக்கும் , தினக்கூலிக்கும் சென்று அன்றாட அரை வயிற்று உணவு சாப்பிட்டு கழித்து வருவது வேதனையாக உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார். விவசாயிகள், பொதுமக்கள் எத்தனை முறை புகார் அளித்தாலும், ஊடகங்களில் எத்தனை முறை செய்திகள் வெளியிட்டாலும் பண முதலை தொழிலதிபர்களிடமிருந்து சட்ட விரோதமாக கனிமம்ங்கள் கடத்துவதை தடுக்க முடியாது காரணம் லஞ்ச பணத்தால் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அடிமையாக இருக்கிறார்கள் என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.