சுயம் நலத் திட்டம் : இலவச பயிற்சியுடன் தையில் இயந்திரம் - பயன் அடைந்த 1,500 ஏழை, எளிய இளம் பெண்கள்!

கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ முயற்சியினால் தொங்கிய சுயம் நலத் திட்டத்தின் கீழ், கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இணைந்து இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்ட ஏழை - எளிய பெண்கள் 1500 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் ஆற்றிய தலைமை உரையில் பேசும்போது :- சுயம் திட்டத்தின் கீழ் 1,500 பெண்களுக்கு தையல் பயிற்சி கொடுத்ததோடு, அவர்களுக்கு நானே தையல் இயந்திரம் வழங்குகிறேன் என சொல்லி வந்ததற்கு மகிழ்ச்சி. பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் விதமாக மார்ச் 2023 துவங்கப்பட்டது இந்த தையல் இலவச பயிற்சி நிறுவனம். பெண்கள் எளிமையாக வரும் வகையில் இருக்க வேண்டும் என்பதால், எந்தெந்த இடங்களில் எல்லாம் பயிற்சி தேவைப்படும் பெண்களை கண்டறிந்து அங்கெல்லாம் பயிற்சி தொடங்க திட்டமிடப்பட்டது. கொடுக்கக் கூடிய சான்றிதழ் என்பது மத்திய அரசு சமர் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்பதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன் வந்து பயிற்சி, சான்றிதழ்கள் வழங்க உதவி செய்தனர். இந்த திட்டம் நடத்த பல்வேறு சிரமங்கள் இருந்தது. அதை கடந்து பயிற்சி வழங்கப்பட்டு, கோடிக் கணக்கான பெண்களுக்கு உதாரணமாக இருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீ்தாராமன் தையல் இயந்திரம் வழங்க உள்ளார். பயிற்சி பெற்றவர்கள் சமர் சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் கல்லூரியில் பட்டம் வாங்குவதற்கு சமம். கல்லூரியில் படித்தாலும் கூட பணிக்காக காத்து இருக்கும் நிலையில், சொந்தமாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோராக மாறி உள்ளீர்கள். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்ற கூற்றின் படி, தொழிலை கற்று கொண்டு உள்ளீர்கள். விஸ்வகர்மா என்கிற திட்டத்தில் கோடிக் கணக்கான கைவினை கலைஞர்கள் பதிவு செய்ய சொன்னார்கள். தையல் வேலை செய்பவர்களும் இந்த திட்டத்தின் இணைந்து கொள்ளலாம். கூடுதலாக 500 ரூபாய் வழங்கி, பொருட்கள் வழங்கும் இந்த திட்டத்தை மாநில அரசு அரசிதழில் வெளியிடாததால், மத்திய அரசின் உதவியை பெற்று தர முடியாத நிலையில் உள்ளோம். விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அரசிதழில் வெளியிடுங்கள் என தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். ஆந்திரா, கர்நாடக, மஹாராஷ்டிரா மாநில பெண்களுக்கு கிடைக்கும் இந்த திட்டம் தமிழகத்தில் இருப்பதால் நம் பெண்களுக்கு கிடைப்பதில்லை. நீலகிரி, வால்பாறை, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை மாநகரில் பொருளாதார பின்தங்கி பகுதிகளில் இருந்து வந்து உள்ள பெண்கள் இந்த பயிற்சியை பெற்று உள்ளனர். நான் பதவி வகிக்கும் தெற்கு தொகுதி மட்டுமில்லை பல்வேறு இடங்களை சார்ந்த பெண்கள் இந்த பயிற்சியை பெற்று உள்ளனர். இந்த திட்டம் தொடரும் என தெரிவித்து கொள்கிறேன் . மோடியின் திட்டங்களை வழங்க செயல்படுத்த சக்திவாய்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நானும் இங்கு இருக்கிறேன் என்றார்.