தாராபுரத்தில் கொடுக்கல் வாங்கல் தகறாரில் பியூட்டி பார்லர் பெண் அம்மா தாக்கிய வழக்கில் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து...
தாராபுரத்தில் கொடுக்கல் வாங்கல் தகறாரில் பியூட்டி பார்லர் பெண் அம்மா தாக்கிய வழக்கில் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Visit: https://winexpress.co.in/
https://www.youtube.com/c/WinExpressCovai
தாராபுரத்தில் கொடுக்கல் வாங்கல் தகறாரில் பியூட்டி பார்லர் பெண் அம்மா தாக்கிய வழக்கில் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணி( 34). இவர் பஸ்நிலையம் அருகே பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் தாராபுரம் அடுத்த காந்திஜி நகரை சேர்ந்த சங்கர் (51) இவர் இந்து மக்கள் கட்சியின்அமைப்பு குழு தலைவராகவும், இவரது நண்பர் சுரபிமணி (53) இவரும் மாவட்ட பொது செயலாளராக உள்ளார்.இந்நிலையில் சங்கர், மதிவாணியிடம் வட்டிக்கு கடனாக பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது, பணம் கேட்டு சங்கரிடம் போனில் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது இது குறித்து சங்கர் தனது மனைவியிடம் கூறியபோது கோபமடைந்த சங்கர், மனனவி இருவரும் சேர்ந்து மதிவாணி பியூட்டி பார்லருக்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.அத்துடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் சுரபிமணியும் அவர்களை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.சண்டையில் மதிவாணி காயமடைந்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது போலீசார் வாக்கு மூலம் பெற்று மதிவாணியை தாக்கியதாக சங்கர் மற்றும் சுரபிமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பிறகு இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியில் பெண்ணை தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.