திருப்பூரில் அதிகாரிகள் கண்காணிப்பை மீறி கள்ளத்தனமாக மளிகை கடையில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதை பொருட்கள் அமோக விற்பனை!!!

திருப்பூர் அங்கேரிபாளையம் வெங்கமேடு நால் ரோட்டில் மலபார் பேக்கரி அருகே உள்ள ஃபிரண்ட்ஸ் மல்லிகை கடையில் அச்சமே இல்லாமல் போதை பொருட்கள் அமோகமாக விற்கப்படுகிறது. பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைகள் உள்ள பகுதியில் போதை பொருட்கள் பல்வேறு இடங்களில் மட்டுமில்லாமல் மளிகை கடையில் விற்பனை செய்யப்பட்டு வருவது இளைய சமுதாயமான பள்ளி மாணவர்களும் குட்கா போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் இதுகுறித்து மாநகர காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை துரிதமாக செயல்பட்டு பல்வேறு நபர்கள் மீது அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ,ஹான்ஸ், போன்ற போதை பொருட்கள் விற்பனையாளர்கள் கள்ளத்தனமாக மளிகை கடையிலும் விற்பனை செய்து வருகிறார்கள். திருப்பூர் P. என் ரோடு போயம்பாளையம் கங்கா நகரில் இரவு நேரங்களில் மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் மல்லிகை கடையில் விற்பனை செய்வது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.