மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் தலையில் பெட்ரோமேக்ஸ் விளக்குகளை வைத்து கோஷங்களை எழுப்பி நூதன முறையில் தங்களது எதிர்ப்பை...
மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் தலையில் பெட்ரோமேக்ஸ் விளக்குகளை வைத்து கோஷங்களை எழுப்பி நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்
மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் தலையில் பெட்ரோமேக்ஸ் விளக்குகளை வைத்து கோஷங்களை எழுப்பி நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். வீட்டுக்கு இரண்டு விளக்குகளும் மாதம் தோறும் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது இதன் காரணமாக வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 20 முதல் 55 காசுகள் வரை அதிகரித்தது இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலையில் பெட்ரோமேக்ஸ் விளக்குகளை வைத்து கொண்டு தேனி மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பி நடந்து வந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளதால் அவர்களால் மின்சார சேவையை பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதால் அவர்களுக்கு வீட்டுக்கு இரண்டு விளக்குகள் மற்றும் மாதம் தோறும் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றும் அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை வழங்க வேண்டும் என நூதன கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் நடத்திய நூதன போராட்டத்தால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி - குரு ஐயப்பன் ( சிவ சேனா )