திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவு டாஸ்மாக் பார் கடையில் குட்கா விற்பனை!!!

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக டாஸ்மாக் பார்களில் ஹான்ஸ் ,குட்கா ,கூல்லிப் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் அடிக்கடி வருகிறது. இது குறித்து கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள அரசு மதுபான கடை எண் 1925 டாஸ்மார்க் பாரில் குட்கா, ஹான்ஸ் விற்கப்படும் காட்சி. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பதை கட்டுப்படுத்த முடியும். டாஸ்மார்க் பார் பொறுத்தவரை ஒரு மாமூல் பல தொழில் என்ற முறையில் அரசு மதுபான கடை விற்பனை நேரம் போக இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சில்லிங் சரக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது . டாஸ்மார்க் பார்களில் பெரும்பாலும் கெட்டுப்போன உணவுகள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள், சைடிஸ் ஆக அதிக விலைக்கு கொடுக்கப்படுகிறது இதனால் அப்பாவி குடிமகன்களுக்கு பல்வேறு உடல் நலக் கேடு ஏற்படுகிறது . மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா , ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.