தேனி அருகே பொதுப்பாதையை தன்னுடைய நிலம் எனக் கூறி விற்பனை செய்யப்பட்ட மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் இவர் கடந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினரான முருகன் என்பவரிடமிருந்து மூன்று சென்ட் நிலத்தை 8.25 லட்சம் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். தற்போது அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக பட்டா விண்ணப்பித்து இடத்தை அளவீடு செய்த போது அந்த இடம் பொது பாதைக்காண இடம் என தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன், முருகனிடம் சென்று கேட்டபோது உன்னால் முடிந்ததை பார் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். மேலும் முருகனுடன், ஈஸ்வரன், சந்தானம் ஆகியோர் சேர்ந்து தன்னிடம் பொது பாதையை காண்பித்து பண மோசடி செய்யப்பட்டதாக கூறி தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரபாகரன் புகார் மனுவை அளித்தார் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரபாகரன் தெரிவிக்கும்போது தனது உறவினர் என்று நம்பி தனது மகளுக்காக வாங்கிய இடம் தற்போது போலியான அறிந்ததால் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் எனவே தனது பணத்தை மீட்டு மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.