உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற அமைதி தின பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

உலக அமைதி தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது நாடு முழுவதும் அமைதியை ஏற்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனியில் உலக அமைதி குழு சார்பில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து உலக அமைதி தின பேரணி நடைபெற்றது, வன்முறைகள், மோதல்களை நிறுத்துவதற்கும் அமைதியை பொதுமக்களிடையே ஊக்குவிப்பதற்கு இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கிய இந்த பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பேரணியை துவக்கி வைத்தார் தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கிய இந்த பேரணி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை வழியாக பெரியகுளம் ரோட்டில் வந்து முடிவடைந்தது. பேரணியில் உலகில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி புறாக்களை பறக்க விட்டும், அமைதியை ஊக்குவிப்பதற்கான பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.