வால்பாறையில் தடையின்றி விற்கும் லாட்டரி பணத்தை இழந்து உயிரையும் விடும் அப்பாவி மலைவாழ் மக்கள்.
வால்பாறையில் தடையின்றி விற்கும் லாட்டரி பணத்தை இழந்து உயிரையும் விடும் அப்பாவி மலைவாழ் மக்கள்.
கோவை மாவட்டம் வால்பாறை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சிக்கு 65 கி.மீ தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் தேயிலை தோட்டங்கள் நிறைந்த சுற்றுசுழல் மாசற்ற சூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் மற்றும் அழகிய காடுகளால் மிகுந்த செழிப்பான இயற்கை நிறைந்த மலை பிரதேசம் . ஆனாலும் இன்றும் பழமை மாறாத ஒரு சிறப்பு மிகுந்த மலைவாழ் தலமாக உள்ளது.இந்த மக்களின் பொருளாதார எதிரி லாட்டரி ஆகும். தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சில முக்கிய நபர்கள் 3 நம்பர் லாட்டரி விற்க மொத்த பணத்தையும் சில மணி நேரத்திலே உருவி விடுகிறார்கள். வால்பாறை நகராட்சி எதிரில் ஆபீஸ் போட்டும் வாழைத் தோட்டம் புதிய பஸ் நிலையம், முடீஸ் பகுதி, காவல் நிலையம் அருகே மற்றும் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் தனிநபர் அறிமுகமாகி கொண்டு வாட்ஸ் அப் மூலம் குறிப்பிட்ட மூன்று நம்பரை பதிவு செய்து அதற்கு பணம் ஜிபே மூலம் பண பெறப்படுகிறது. இதனால் லாட்டரி விற்கும் நபர்கள் எளிதாக தப்பி விடுகிறார்கள். தப்புவதற்கு மாமூலும் ஒரு காரணமாகும். 3000 க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட கூலித் தொழிலாளிகள் வசித்து வரும் வால்பாறை பகுதியில். .அவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்தி வரும் நிலையில் குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி கேரளா லாட்டரி சீட்டு மற்றும் 3 நம்பர் லாட்டரி வாங்கி மொத்த பணத்தை இழந்து தங்கள் குடும்ப வாழ்க்கையையே சீரழித்து வருகிறார்கள் . தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளிகள் மற்றும் மலைவாழ் அப்பாவி மக்களை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி அமோக விற்பனை நடைபெறுகிறது . மேலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு அதிகளவில் விற்கப்படுகிறது. சட்ட ஒழுங்கு தாக்கப்படுவதாக கணக்கு காட்ட அவ்வப்போது போலீசார் லாட்டரிகள் புழக்கத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுப்பதாகவும், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்வதாகவும், விற்போரை கைது செய்வதாகவும் செய்திகள் வருவதுண்டு.இந்த நடவடிக்கைகளால் லாட்டரி விற்பனை கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை போலீசாரின் நடவடிக்கை வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே உள்ளது. இது போன்ற லாட்டரி சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது தற்கொலைக்கு குடும்ப சூழ்நிலையை காரணம் என்று காரணம் காட்டி முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. சில நூற்றாண்டுகள் பின் தாங்கியுள்ள வால்பாறை இன்றைய பண வெறி பிடித்த லாட்டரி முதலீடு சிக்கி சீரழிவதும் அதற்கு உதவியாக அரசும் அதிகாரியமும் கொண்ட வேடிக்கை பார்ப்பது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.