தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் கட்டுப்பாடுகளை மீறி சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்வதாக புகார்

தேனி அருகே காணாவிலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை தேனி, திண்டுக்கல் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினசரி 2000 முதல் 3000 வரையிலான பொதுமக்கள் புறநோயாளிகளாக வருகை தந்து சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் உள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள் நோயாளி சிகிச்சை பிரிவிற்குள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் உறவினர்கள் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில் சுகாதாரம் அற்ற உணவுகளை உள் நோயாளி சிகிச்சை பிரிவுக்குள் விற்பனை செய்து வருவதாக தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் புகார் கூறுகின்றனர். உள் நோயாளி சிகிச்சை பிரிவிற்குள விற்பனை செய்ய அனுமதி இல்லாத நிலையில் சுகாதாரமற்ற உணவுகளை நோயாளிகளுக்கு விற்பனை செய்வதால் அவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் மனுவை அளித்தனர். மேலும் சுகாதாரமற்ற உணவுகளை மருத்துவமனை அலுவலகத்தில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். பேட்டி - குரு ஐயப்பன் ( மாநில துணை தலைவர், சிவசேனா கட்சி)