அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் சார்பில் வருடாந்திர விளையாட்டு விருது விழா!!!

அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் சார்பில் வருடாந்திர விளையாட்டு விருது விழா சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. அப்போது சாம்பியன் பட்டத்தை வென்ற திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிக்கான கோப்பையை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர். வேல்ராஜ் மற்றும் கல்வியாளர்கள் நபி முகமது ரியாஸ், டாக்டர் பி. அசோக் சிகாமணி ஆகியோரின் திருக்கரத்தால் போட்டியில் வென்ற மாணவ- மாணவிகள் பெற்றனர். உடன் கல்லூரியின் அறங்காவலர் சூர்யா ரகுராம் மற்றும் கல்வியாளர்கள் முத்து காமாட்சி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.