ஆண்டிபட்டி அருகே திமுக கட்சி கொடியினை தீயிட்டு எரித்த மர்மநபர்கள் குறித்து வைகைஅணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் ஆண்டிபட்டி - பெரியகுளம் சாலைக்கு முன்பாக திமுக கட்சியினர் சார்பில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் கொடிக்கம்பத்தில் இருந்த திமுக கட்சி கொடியை எடுத்து அதற்கு கீழேயே வைத்து தீயிட்டு எரித்துள்ளனர். இது குறித்து காலையில் அப்பகுதிக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுக கட்சியினர் திமுக கட்சி கொடியை தீயிட்டி எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வைகைஅணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து திமுக கட்சிக்கொடியை தீயிட்டி எரித்த மர்மநபர்கள் குறித்து வைகைஅணை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.