இம்மானுவேல் சேகரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்!

இம்மானுவேல் சேகரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனியில் அவரது உருவப் படத்திற்கு திமுக, தமிழகம் முன்னேற்ற கழகம், ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். இம்மானுவேல் சேகரின் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினர் கோரிக்கை. தியாகி இம்மானுவேல் சேகரனின் 67 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது இதற்காக தேனி பழைய பேருந்து நிலையத்தில் அவரது புகைப்படத்திற்கு பல்வேறு கட்சியினர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இமானுவேல் சேகரன் புகைப்படத்திற்கு மாலைகள் அணிவித்து வீர வணக்கம் என்ற கோஷங்களை எழுப்பி அஞ்சலி செலுத்தினர் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், ஃபார்வர்ட் பிளாக் இந்து எழுச்சி முன்னணி உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அவரது புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர். மேலும் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினர் அவரது குருபூஜை நிகழ்ச்சி அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்ட கார்களில் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேட்டி - மன்னர் பாலா ( தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் )