உடல் சவால் உடையோர் கடலுக்குள் 604 கி.மீ நீந்திக் கடக்கும் உலக சாதனை நிகழ்ச்சி!

உடல் சவால் உடையோர் கடலுக்குள் 604 கி.மீ தூரத்தை நீந்தி கடக்கும் சாதனை நிகழ்ச்சி ஒரு 5-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை உலக சாதனையை நிகழ்ச்சிக்காக நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை வேளச்சேரி ஆயுஷ் முதியோர் இல்ல கருத்தரங்க வளாகத்தில் நிருபர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார், ஆயுஷ் முதியோர் இல்லத்தைச்சேர்ந்த இரமணா திலகம், மதிவதனி உடல் சவால் உடைய சிறார்களின் பெற்றோர்கள் பக்கத்திலிருந்து வனிதா, பிரியா உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: உடல் சவால் உடைய சிறார்கள் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை மெரினா வரை ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து சுதந்திரத்தனமான 15ஆம் தேதி வரை சுமார் இன்னும் 604 கிலோமீட்டர் தூரத்தை கடல் மார்க்கமாகவே கடந்து உலக சாதனை நிகழ்ச்சியை நிகழ்த்த இருக்கின்றனர். இதற்கு நான் பிரத்தியேகமாக ஏழு பேர் கொண்ட நீச்சல் சிறப்பு பயிற்சியாளர்கள் குழு, மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவையின் அங்கத்தினர்கள் ஆகியோர்களின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டு இந்த நிகழ்ச்சியை நடைபெற உள்ளது. 15 உடல் சவால் உடைய சிறுவர்கள் பங்கேற்கும் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் தலா ஒவ்வொரு நீச்சல் புரிவோருரம் மூன்று மணி நேரத்திற்கு ஒருவர் என்ற முறையில் சுழற்சி அடிப்படையில் நீச்சல் அடித்து கடலின் தூரத்தை கடந்து செல்வர். ஏற்கனவே பலமுறை இந்த உடல் சவால் உடையோர் நீச்சல் பயிற்சியில் சில சாதனைகளை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு சென்னை செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் நிதி உதவி அளித்து இந்நிகழ்ச்சியை ஊக்கப்படுத்தி உள்ளனர் இவ்வாறு அவர்கள் கூறினர்.