கே ஏ ஜி டைல்ஸ் வழங்கும் மாபெரும் டைல்ஸ் எக்ஸ்போ!!!

மார்ச் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை திருவேற்காடு சிக்னல் அருகில் தினசரி காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியின் துவக்க விழா கே ஜி டைல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் நடைபெற்றது. கே ஏ ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜி. முரளிதரன் தலைமை வகிக்க இயக்குனர் வி .எஸ் . பாலாஜி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்தக் கண்காட்சி குறித்து வேளாண்மை இயக்குனர் ஜி. முரளிதரன் கூறியதாவது: 2500 வகையான கே ஏ ஜி பிராண்டட் ஃபுளோர் டைல்ஸ், வால் டைல்ஸ், ரூஃப் டைல்ஸ், பிச்சர் டைல்ஸ் , குளியலறை மற்றும் கழிவறைகளில் பதிக்கப்படும் டைல்ஸ் உள்ளிட்ட பல வகை டைல்ஸ்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புது வீடு, பழைய வீடு என்று எதுவென்றாலும் நுகர்வோரின் எண்ணம், சிந்தனைக்கு ஏற்ப டைல்ஸ் வண்ணமிகு வடிவங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றார். உடன் சுபாஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இருந்தனர்.