திருப்பூர் மாநகராட்சி 2 வது வார்டில் சாக்கடை வடிகால் இன்றி சுகாதார சீர்கேடு கண்டுகொள்ளாத கவுன்சிலர் பொதுமக்கள் கண்டனம்

திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் முறையான திட்டமிடல் இல்லாததால் கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் தெருக்களில் குளம் போல் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது . குழி தோண்டி சில இடங்களில் தண்ணீரை இறக்கி விடுவதால் நிலத்தடி நீரும் மாசடைகிறது தேங்கிய கழுவி நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவது மட்டுமில்லாமல் கொசுக்கள் உற்பத்தி ஆகி சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர் வரை அனைத்து தரப்பினருக்கும் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர் . எனவே அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் கால்வாய் அமைத்துக் கொடுத்து அப்பகுதிகளில் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.