கோவை கணபதி கேகே நகர் பகுதியில் திமுகவினரால் வைக்கப்பட்ட பேனரை அகற்றக் கூறி பாஜக தலைவர் ஆர்ப்பாட்டம்!

கோவை கணபதி கேகே நகர் பகுதியில் பிரதமர் மோடியை தவறாக சித்தரித்து திமுகவினரால் வைக்கப்பட்ட பேனரை அகற்றக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணபதி மண்டல் பாஜக தலைவர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு சரவணம்பட்டி எஸ் எம் எஸ் மஹாலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவினர் அதிகப்படியாக அப்பகுதியில் கூடுவதால் பரபரப்பு