பாரதிய ஜனதா வழக்கறிஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம்!!!

பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள ஹோட்டல் பென்ஸ் பார்க்கில் நடைபெற்றது. வழக்கறிஞர் வினோத் பி. செல்வம் தலைமையில் இந்தக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கறிஞர் அணியின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் பால் கனகராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் கூறும் போது வழக்கறிஞர் அணி என்றாலே வலுவான அணி திமுக அணி தான் என்பதை மாற்றி பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அணி வலிமையானது என்று கூறும் நிலைக்கு உழைக்க தேர்தல் காலம் வந்திருக்கிறது. அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். வழக்கறிஞர் வினோத் பி. செல்வம் பேசுகின்ற போது பாரதப் பிரதமர் மோடியின் மாபெரும் வெற்றிக்கு வழக்கறிஞர்களாகிய உங்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை! ஒத்துழைப்பு தாருங்கள்.. மாபெரும் வெற்றியை மோடியின் கரத்தில் ஒப்படைப்போம் என்றார். கூட்டத்தில் வழக்கறிஞர்நதியா சீனிவாசன், வழக்கறிஞர் குணசீலன், வழக்கறிஞர் ஷ்யாம் கணேஷ், வழக்கறிஞர் கிரண், வழக்கறிஞர் வெங்கடேஷ் பாபு, வழக்கறிஞர் ரங்கநாதன், வழக்கறிஞர் செங்குட்டுவன், வழக்கறிஞர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.