சென்னை திருவான்மியூரில் டிராவல்ஸ் 2020 புதிய அலுவலகம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்!

வெளிநாடு சுற்றுலா கனவோடு இருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக சென்னை திருவான்மியூரில் திறக்கப்பட்டுள்ள அலுவலகம் தான் டிராவல்ஸ்-2020 என்னும் நிறுவனம். இதன் புதிய அலுவலகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, கவுன்சிலர் ராதிகா, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, திமுக வட்ட செயலாளர் ம. தமிழரசு, 147-வது வார்டு திமுக மாவட்ட துணை அமைப்பாளர் கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அலுவலக திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த டிராவல்ஸ்-2020 நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முகேஷ் கண்ணன் கூறுகையில் வெளிநாடு சுற்றுலா சம்பந்தமான அனைத்து வகையான தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம் என்றார்.