சென்னையை பசுமையாக்கும் 92.7 பிக் எஃப்எம் ஒத்துழைப்புடன் நம்ம ஊரு நம்ம கெத்து!

சுற்றுப்புற சூழலை பாதுகாக்க 92.7 பிக் எஃப்எம் நிறுவனத்தினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். " நம்ம ஊரு நம்ம கெத்து"- 92.7 பிக் எஃப்எம் சென்னை மக்களுக்காக பூர்விகா அப்ளையன்சஸ், ஊக்கி எக்கோ ஃபிரண்ட்லி தயாரிப்புகள், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறையுடன் கைகோர்த்து சென்னையை பசுமையாகவும் சுத்தமாகவும் மாற்றி அமைக்க "நம்ம ஊரு நம்ம கெத்து" என்ற பெயரில் விழிப்புணர் வு நிகழ்ச்சி பல இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் பல இடங்களை தேர்வு செய்து அங்கே பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நடேசன் பூங்கா மற்றும் செம்மொழி பூங்காவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கு இசை கச்சேரியுடன் சுற்றுப்புற சூழல் பாதுகாவலர்களுக்கு விருதுகள் வழங்கியும் கௌரவப்படுத்தினர். ஜூன் மாதம் ஆரம்பித்த இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக தற்போது விருகம்பாக்கம் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் இ வேஸ்ட் & குளோத் கலெக்சன் டிரைவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காலநிலை மாற்றத்துறை மிஷன் இயக்குனர் விவேக்குமார் பிரசாந்த் யாதவ், ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் ஏவிஎம் கே. சண்முகம், பூர்விகா நிறுவனத்தின் பொது மேலாளர் சிவகுமார் கனகராஜன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, பிக் எஃப் எம் நிலைய தலைமை நிர்வாகி ஹரிஷ், ஊக்கி எக்கோ பிரண்ட்லி கிளீனிங் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.