திருப்பூரில் பகிரங்கமாக விற்கப்படும் குட்கா அப்பாவி வியாபாரிகள் மீது வழக்கு மொத்த வியாபாரிகளிடம் மாமூல்
திருப்பூரில் பகிரங்கமாக விற்கப்படும் குட்கா அப்பாவி வியாபாரிகள் மீது வழக்கு மொத்த வியாபாரிகளிடம் மாமூல்
திருப்பூர் பிஎன் ரோடு பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் இருந்து திருமுருகபூண்டி செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மார்க் மதுபான கடை எண் 1969 அருகே உள்ள பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பொருட்கள் அமோக விற்பனை நடைபெறுகிறது . மற்றும் திருமுருகபூண்டி சாலையில் உள்ள ஏவிபி பள்ளியின் அருகில் உள்ள அரோமா எ பேக்கரி செயல்பட்டு வருகிறது. பேக்கரியின் அருகில் உள்ள பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் ,குட்கா பொருட்கள் சிறுவர்கள் மூலம் மாணவ, மாணவிகள் உட்பட பலர்க்கு அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடனடியாக அதிரடி நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உணவு பாதுகாப்பு அதிகாரியாக செயல்படும் விஜய லலிதாம்பிகா பணியாற்றி வருகிறார் . மிகவும் கண்டிப்பானவர் நீதி நேர்மை என பேச்சு மட்டுமே பேசுவார். அனைவருக்கும் பல நல்ல அறிவுரைகள் வழங்குவார் ஆனால் , நேர்மையாக நடவடிக்கை எடுப்பதில்லை. திருப்பூர் மாவட்டம் முழுவதும் குட்கா, கூல் லீப் , ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும் . ஆனால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் புதிதாக 1000க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள் முளைத்துள்ளது.
இதற்கு மூல காரணம் அரசின் சட்ட விதிமுறைகளை காரணம் , நிரந்தரமாக ஒரு இடத்தில் போதை பொருள் பெற்றால் முதல் முறை சில ஆயிரம் , மீண்டும் சில நாட்களில் கடை திறக்க முடியும் . இரண்டாம் முறை பத்தாயிரம் அபராதம் ஒரு மாதம் கடை திறக்க. மூன்றாம் முறை எனறால் 25 ஆயிரம் அபராதம் ஒரு மாதத்திற்கு மேல் கடை திறக்க ஆகும். அது போல் அடுத்தடுத்து முறை அதிகமான தண்டனை மற்றும் அபராதம் அதனால் நிரந்தரமாக விற்ற அனைவரும் ஓரளவு தெரிந்து விட்டார்கள். ஆனால் பெட்டிக்கடை என்ற முறையில் தொடங்கி சமூக விரோதிகள் போதை பொருட்களை பகிரங்கமாக விற்று வருகிறார்கள். ஏதேனும் புகார் அல்லது செய்தி வந்தால் பெயருக்கு வழக்கு பதிவு செய்து உரிமையாளர் யார் என்று கூட தெரியாமல் வழக்குகளை ஒரே நாளில் முடித்து விடுகிறார்கள். மறுநாள் அந்த இடத்தின் அருகே புதிதாக ஒரு பெட்டி கடை தொடங்கி விற்பனையும் தொடரும். போதை விற்கும் சமூக விரோதிகள் மீண்டும விற்க முழுக்க முழு காரணம் உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய் லலிதாம்பிகா மற்றும் பல வருடங்களாக திருப்பூர் மாநகரில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறிக்கொண்டு மாதம் பல லட்சம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் தங்கவேலு தான் காரணம். என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்பட்டு இருந்தால் திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சமூக விரோதிகள் விற்கவே முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி உட்பட அனைவரையும் கூண்டோடு மாற்றினால் மட்டுமே திருப்பூர் லேமாவட்டத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும் திருப்பூர் மாவட்டத்தில் போதை பொருள் ஒரு பாதிப்பென்றால் காலபதியான உணவு மற்றொரு பாதிப்பாக தொடர்கிறது முக்கியமாக உடனடி உணவு ரெடிமேட் சப்பாத்தி, இடியாப்பம், இட்லி தோசை மாவு அனைத்தும் சுகாதார மற்றும் முறையில் காலாவதி தேதியின்றி எளிதாக விட்டு வருகிறார்கள் இவர்களிடம் கட்டாயப்படுத்தி ஆயிரக்கணக்கில் மாமூல் வசூல் செய்து வருகிறார்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் . போதையால் இளைய தலைமுறைகள் ஒருபுறம் அழிந்து வர காலாவதி உணவால் அனைவரும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.