சைதை இளங்காளியம்மன் கோவிலில் நேற்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது

சைதை அண்ணா சாலையில் உள்ள இளங்காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆன்மீக வள்ளல் எஸ். வெற்றி வராகன், மாண்புமிகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த. மோ.அன்பரசன் பரம்பரை தர்மகத்தா எஸ். கிருஷ்ணமூர்த்தி, முன். சண்முகசுந்தர சிவாச்சாரியார், பரணிதரன், ஆலய குருக்கள் என். தாமோதரன், ஜி என் பிரபு, ஆலய ஸ்தபதி கே. மூர்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கும்பாபிஷேகத்திற்கு அருட்கொடையாக தங்க முலாம் கும்ப கவசத்தை ஆன்மீக வள்ளல் ச. வெற்றி வராகன் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த பாலசுப்பிரமணியன், ஆலய அர்ச்சகர் தாமு,ஜனநாயக புதிய எழுச்சி பேரவையின் மாநில தலைவர் சி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் இருந்தனர். விழாவிற்கு வருகை தந்த அமைச்சர்களை ஆன்மீக வள்ளல் ச. வெற்றி வராகன் மாலை அணிவித்து வரவேற்றார்.