தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீப்பாலகோட்டை கிராமத்தை சேர்ந்த ஆக்கிரமித்துள்ள நபரிடமிருந்து நீதிமன்ற ஆணைபடி மீட்க காவல் துறை பாதுகாப்பு வழங்க கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சி தலைவரிடம் முதியவர் பவுன்ராஜ் புகார் மனு அளித்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீப்பாலகோட்டை கிராமத்தை சேர்ந்த வயது முதிர்ந்த பவுன்ராஜ் பார்வதி தம்பதியினர்க்கு சொந்தமான தென்னந்தோப்பில் அத்துமீறி ஆக்கிரமித்துள்ள நபரிடமிருந்து நீதிமன்ற ஆணைபடி மீட்க காவல் துறை பாதுகாப்பு வழங்க கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சி தலைவரிடம் முதியவர் பவுன்ராஜ் புகார் மனு அளித்தார். அதே ஊரை சேர்ந்த பஞ்சாங்கம் மற்றும் மனைவி பேச்சியம்மாள் வகையறாக்கள் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பில் அத்து மீறி நுழைந்து குடிசை போட்டு உள்ளதாகவும், தோப்பிற்குள் சென்றால் கடுமையான ஆயுதங்களால் மிரட்டி உள்ளன். இது தொடர்பாக ஓடை பட்டி காவல் துறையினர் முறையான நடவடிக்கை இல்லாததால், உத்தமபாளையம் உரிமையில் நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தும் மதுரை உயர் நீதிமன்றம் தனக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கவும் காவல் துறைக்கு அறிவுறுத்தியது. தோப்பில் நீதிமன்றமும் தனக்கு உரிமை உள்ளதாக தெரிவித்தும் தள்ளாடும் வயதான பருவத்தில் உரிமை எடுக்க காவல் துறை ஒத்துழைப்பு இல்லாததால் மன வேதனையில் உள்ளதாக தெரிவித்தார். வரும் 31 ம் தேதி தனக்கு சொந்தமான தோப்பில் தேங்காய் பறிக்க இருப்பதால் அசம்பாவிதங்களை தடுக்க காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சி தலைவரிடம் புகார் மனு அளித்தார்.