தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க வைர விழா!

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைர விழா மற்றும் 16 வது மாநில மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் மாநில தலைவர் எம்.பி. முருகையன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கே. கே.எஸ். எஸ். ராமச்சந்திரன் சிறப்பு உரையாற்றினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். ராமு வரவேற்புரை ஆற்றினார். சங்க பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் தீர்மானங்கள் குறித்த விளக்க உரையாற்றினார். நிறைவாக சங்கத்தின் மாநில பொருளாளர் சோமசுந்தரம் நன்றி உரை ஆற்றினார். முன்னதாக வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கை முழக்கப் பேரணி நடைபெற்றது.