தொடர் விபத்துகளால் மக்கள் சுற்றுலாவுக்கு நீலகிரி மாவட்டம் வருவதற்கு அஞ்சுகிறார்கள்

தொடர் விபத்துகளால் மக்கள் சுற்றுலாவுக்கு நீலகிரி மாவட்டம் வருவதற்கு அஞ்சுகிறார்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து பிக்கப் வாகனத்தில் 17 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்த நிலையில் பெட்டட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனடியாக அவர்களை மீட்டு குன்னூர் லாலி மருத்துவமனையில் 6 நபர்களும் அவசர மேல் சிகிச்சைக்காக உதகை மருத்துவமனைக்கு 11 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். வணிக வாகனத்தில் சுற்றுலா e pass. நடைமுறை என்ன? ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த 19 பேருக்கு யார் பொறுப்பு? மேட்டு பாளையம் , நீலகிரி, கோத்தகிரி, சுங்க சாவடிகளில் அதிகாரிகள் ஒருவர் கூட வாகனத்தை சோதனையிட வில்லையா? எந்த வாகனம் வந்தாலும் விட்டுவிடுவதற்க்கு எதற்கு இந்த இ பாஸ்? சுற்றுலா துறை தூங்கி கொண்டு இருக்கிறதா? சுங்க சாவடிகளில் ஆம்புலன்ஸ் இருக்கிறதா இல்லையா? மாவட்ட நிர்வாகம் மக்களின் உயிரைப்பற்றி கவலை இல்லாமல் இருக்கிறதா?? அரசு அதிகாரிகள் மூலம்பணம் பறிப்பு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறதா?? மற்றபடி ஊட்டியில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை... என்று நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்களை கண்டு மக்கள் மனதில் பல கேள்விகளும் குழப்பங்களும் எலும்ப தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்குமா?? வின் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக கோவையிலிருந்து ஸ்டீபன்