திருப்பூர் கே வி ஆர் நகரில் மளிகை கடையில் லாட்டரி பகிரங்கமாக விற்பனைக்கு மும்பாய் தாதா சரவணன் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறையினர்

திருப்பூர் கே வி ஆர் நகர் கிரி நகர் 2 வது வீதியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். முன்னதாக தான் மும்பையில் வசித்ததாக மிகப்பெரிய தாதா குரூப்பில் இருந்ததாகவும். அடிக்கடி ஜெயில் சென்று வந்ததால் அனைத்து சட்ட நடைமுறைகளும் நன்கு தெரியும் என மார்தட்டிக்கொள்ளும் சரவணன். தற்போது மளிகை கடையில் மட்டும் இன்றி. கே.வி.ஆர் நகர் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் பப்ளிக்காக விற்பனை செய்து வருகிறான். தட்டிக் கேட்கும் பொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுவது. பத்திரிகையாளர்கள் என்றாலும் காவல் நிலையத்தில் கைநீட்டி அடிப்பதும் பின்பு அவரிடமே சமாதானம் பேசி வழக்கின்றி சொற்ப பணம் கொடுத்து சமாதானம் செய்வது போன்ற அனைத்து தில்லாலங்கடி வேலைக்ஷ செய்து வருகிறான். காவல் நிலையத்திற்கு குறிப்பிட்ட மாதம் மாதம் மாமுல் செல்வதால் கண்டு கொள்வதில்லை மளிகை கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் முன்னிலையில் போதையில் வரும் நபர்கள் லாட்டரி எண் வாங்குவதாக கூறிக்கொண்டு கிண்டலும் கேலி செய்வது மிகவும் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. இப்பகுதி மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட எஸ்பி,கேவிஆர் நகர் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். உண்மையில் சரவணன் மும்பை தாதாவிடம் வேலை செய்தானா இவன் மீது எத்தனை வழக்குகள் உள்ளன தற்பொழுது திருப்பூரில் சரவணன் தாதாவாக வலம் வருகிறாரா சட்ட நுணுக்கங்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு காவல்துறையினரே மிரட்டுகிறாரா என பொதுமக்கள் சாராமரியாக கேள்வி எழுப்புகிறார்கள். இவனின் வழக்கு விபரங்களை எடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும் என்பதை அனைவரையும் விருப்பம் ஆகும்.