திருப்பூர் கே.பி.என். தோட்டம் பார் அருகே 24 மணி நேரமும் தடையில்லா மது விற்பனை பொதுமக்கள் நடமாட அச்சம்

திருப்பூர் கே.பி.என். தோட்டம் பார் அருகே 24 மணி நேரமும் தடையில்லா மது விற்பனை பொதுமக்கள் நடமாட அச்சம் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் எஸ். எஸ் நகர் பிரிவு கே.பி.என் தோட்டம் பகுதியில் உள்ள பாரில் அருகே 24 மணி நேரமும் மது விற்பனை பகிரங்கமாக நடைபெறுகிறது. மது வாங்கிய அருந்திவிட்டு குடிமகன்களின் அடாவடி செயலாலும் ,அருவருக்கத்தக்க பேச்சாலும் ,ஆடை இன்றி அங்கு இங்கு தெரியும் அலங்கோலமான காட்சிகளால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட அச்சமாக உள்ளது என்ற கூறி இந்த கடையை இடமாற்றம் செய்து பல்வேறு போராட்டம் செய்தும் எந்த பலனும் இல்லை. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் மூன்று நாள் முழு மதுபான கடை அடைப்பு, நே‌ற்று மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு ஒரு நாள் மதுபான கடை முழு அடைப்பு முடிந்தும் இன்று கடை திறக்க 12 மணி வரை மூன்று மடங்கு விலையில் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. மற்றும் தொடர்ந்து மதுபான கடை கடை திறக்கும் நேரம் 12 முதல் 10 மணி போக மீதி நேரத்தில் மூன்று மடங்கு விலையில் மது விற்பனை இந்த பாரின் அருகே சமூக விரோதிகள் தைரியமாக விற்பனை செய்து வருகிறார்கள். இதுகுறித்து செய்திகள் வெளியிடும் நிருபர்களை, கள்ளத்தனமாக சரக்கு வைக்கும் பார் உரிமையாளர்கள் தங்களிடம் மாத மாதம் கைக்கூலி வாங்கும் நிருபர்கள் மூலம். செய்தி வெளியிடும் நிருபர்களிடம் உங்கள் வீடு எங்கே இருக்கிறது ,பல்லடம் சம்பவம் போல் உங்களையும் பார் உரிமையாளர்கள் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கவனமாக இருங்கள் என நூதனமான முறையில் மிரட்டுகிறார்கள். மேலும் செய்தி வெளியிட்டால் உங்களுக்கு என்ன நன்மை என்று ஒரு பத்திரிகையாளரே கேட்பது கேலிக்கூத்தாக உள்ளது. இவ்வாறு பல்வேறு விதமாக பத்திரிகையாளர்களை மிரட்டி தங்களின் இல்லிகள் சரக்கு விற்பனையை செய்திகள் வெளியிடாதபடி மிரட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் மிரட்ட பல்லடம் சம்பவத்தை பயன்படுத்துவது பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை விட சமூக விரோதிகளின் நலனே அக்கறை என்பது போல் அரசு செயல்படுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.