ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை அனுமதியுடன் செயல்பட்டு வரும் போலி லாட்டரி விற்பனை!!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை அனுமதியுடன் செயல்பட்டு வரும் போலி லாட்டரி விற்பனை!!!
Visit: https://winexpress.co.in/
https://www.youtube.com/c/WinExpressCovai
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை அனுமதியுடன் செயல்பட்டு வரும் போலி லாட்டரி விற்பனை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பேருந்து நிலையம் பின்புறம் மற்றும் கோவை மெயின் ரோடு ,கோட்டுவீரான்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதி அப்பாவி மக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பஞ்சாப் ,கேரளா ஆகிய மாநில லாட்டரிகளை போலி லாட்டரிகளாக தயாரித்து அப்பாவி விற்பனை செய்து மக்களிடம் லட்சக்கணக்கான பணத்தை வசூலிக்கின்றனர். இவ்வாறு பெறப்படும் பணத்தின் பெரும் பகுதியை அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கிவிடுவதால் அதிகாரிகள் இந்த சட்டவிரோத கும்பலை கண்டு கொள்வதில்லை ஏற்கனவே போதை பொருட்களின் தலைநகரமாக மாறிவருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் போலி லாட்டரி விற்பனை செய்யும் கும்பல்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது மாவட்ட நிர்வாகம் உடனடியாக போலி லாட்டரி விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.