திருப்பூர் மாநகராட்சி 3வது வார்டில் குப்பை கழிவுகளால் சுகாதார கேடு மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அலட்சியம்

திருப்பூர் மாநகராட்சி 3வது வார்டு பி.என்.ரோடு அண்ணா நகர் பிரதான சாலையில் உள்ள ராஜீவ் நகர் ஆர்ச் ஒன்றாவது வீதியில் குப்பைகள் அகற்றப்படாமல் பல நாட்களாக குவிந்து கிடைக்கிறது. உணவுக் கழிவுகள் பல்வேறு கம்பெனிகளில் கழிவுகளால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. பள்ளி விடுமுறை காலம் என்பதால் வீதிகளில் விளையாடும் குழந்தைகள் மாணவ மாணவிகள் மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள் . அவ்வப்போது பெய்யும் கோடை மழையால் நோய் தொற்று கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது . திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தடவை புகார் தெரிவித்தும் குப்பை அகற்றாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். நோய் தொற்று ஏற்பட்டு ஏதேனும் உயிர் இழப்பு ஏற்படும் முன்பு திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, கழிவு குப்பைகளை அப்புறப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.