திருப்பூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை பணிகள் அதிக கமிஷன் ,குறைந்த தரம் நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்
திருப்பூர் மாநகராட்சியில் தரமற்ற சாலை பணிகள் அதிக கமிஷன் ,குறைந்த தரம் நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்
திருப்பூர் மாநகராட்சி பாண்டியன் நகர் 2 வது வார்டு டீச்சர் காலனியில் ஸ்ரீ காசி விநாயகர் கோவில் அருகில் கடந்த சில நாட்கள் முன்பு நடந்தது. இதில் அதிக கமிஷன், குறைந்து தரத்தில் போடப்பட்டதால் லோடு லாரி சென்றபோது சாலை ஒரு அடி ஆழத்திற்கு குழியாக இறங்கியது , இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அப்பகுதி கவுன்சிலர் மாலதி கேபிள் ராஜா அவர்களிடம் முறையிட்டார்கள் . மேலும் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தற்போது போடப்பட்ட சாலைகள் அனைத்தும் தரம் குறித்து சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் , நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அப்பகுதி மக்களின் வாக்குகளை கவர அவசரகதியாக இந்த சாலை போடப்பட்டது என்றும் ,சாலை போடும்போது சாலையை சமப்படுத்த ரோடு ரோலர் வாகனங்கள் பயன்படுத்தும் போது உடையாத சாலை .லோடு லாரி செல்லும் பொழுது உடைந்தது எப்படி என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் இந்த வார்டில் நடக்கும் அனைத்து பணிகளும் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்படுகிறது, பணம் தராத பகுதிகளில் அடிப்படை வசதிகள் பாதியிலே நிறுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. தரமற்ற சாலைகளுக்கு காரணமான ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த பணத்தை திரும்பி வாங்கவும், அதற்கு ஒரு துணையாக இருந்த அதிகாரிகள் சம்பளத்தில் இழப்பீடாக பெற வேண்டும் என்று கூறுகிறார்கள் அப்படி செய்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் இதுபோல் ஊழல் நடக்காது என்றும் கூறுகிறார்கள் . திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார்,
இரண்டாவது மண்டலம் தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் இந்த தரமற்ற சாலைக்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . பணியாற்றும் அதிகாரிகள் தகுதியானவர்களா ஒப்பந்தம் வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தகுதியானவர்களா என்பதை ஆய்வு செய்து பல லட்சம் செலவு செய்து போடப்படும் சாலை மழை நீர் வடிகால் அடிக்கடி ஆய்வு செய்து தரங்களை சோதனை செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா ? என்று அந்த பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.