தேனி அருகே பேரூராட்சி அலுவலகம் முன்பு காட்சி பொருளாக மட்டுமே வைக்கப்பட்டிருக்கும் மஞ்சப்பை இயந்திரம்.

தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது இந்த பேரூராட்சி பகுதிகளின் கீழ் பிரசித்திபெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு முல்லைப் பெரியாற்றில் குளித்து விட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் வரக்கூடிய நிலையில் அவர்கள் உபயோகிக்கப்படும் நெகிழிப்பை தவிர்க்கும் விதமாக வீரபாண்டி பேரூராட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு இருந்தது. பொதுமக்கள் நெகிழிப்பைகளை தவிர்த்து விட்டு மஞ்சள் பையை உபயோகிக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி விழிப்புணர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிர் மாறாக இருக்கின்றது வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் இந்த அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சப்பை இயந்திரத்தில் பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பெற முயன்ற போது இயந்திரம் செயல்படாமல் பத்து ரூபாய் நாணயம் திரும்பி வந்துவிட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக வைக்கப்பட்ட மஞ்சப்பை இயந்திரம் அதன் பின் செயல்படாமல் இருப்பதால் பெயருக்கு மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை செயல்படுத்தாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது என்றும் விரைவில் அதை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.