தேனியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் நலச் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக கடந்த 10 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை பணி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு பணி உயர்வு வழங்கி ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்றும் இ.எம்.ஐ.எஸ் பணிக்கு என்று பணியாளர்கள் உள்ள போது இளநிலை உதவியாளர்களை அந்த பணிகளை மேற்கொள்ள வைப்பது அதிக பனி சுமைக்கு உள்ளாக்க கூடும் என்பதால் இ.எம்.ஐ.எஸ் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பி.இ தகுதி போதுமானது என்ற இருக்கின்ற நிலையில் பி.இ முடித்தவர்களுக்கு ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பணி ஆணை நியமனம் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர் ஆகிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழங்கிடு வழங்கிடு ! பதவி உயர்வு வழங்கிடு ! என்ற கோஷங்களை எழுப்பி சுமார் 50க்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.