பெரிய நாயக்கன் பாளையத்தில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
பெரிய நாயக்கன் பாளையத்தில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோடு அமுதா ஸ்டோர்ஸ் அருகில் நடைபெற்ற தமிழக அரசின் மின்கட்டண உயர்வைக்கைவிடக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.ஆர்ப்பாட்டத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக் கவுன்சிலர் தோழர் நவ.சிவராஜன் தலமை தாங்கினார் .ஒன்றியச்செயலாளர் தோழர் எம்.மோகன்ராஜ் மற்றும் என்.பால மூர்த்தி, ஏ.ஆர்.துரைசாமி தேவராஜ் மற்றும் ஒன்றியக்கமிட்டி உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.