ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் மலைப்பகுதியில் விவசாய நிலத்திற்குள் வந்ததால் கிராமமக்கள் அச்சம்!

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் மலைப்பகுதியில் இருந்து இறங்கிய கரடி ஒன்று கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்குள் வந்ததால் கிராமமக்கள் அச்சம்-காட்டுபகுதிக்குள் பதுங்கியுள்ள கரடியை தேடும் பணியில் வனச்சரகர் தலைமையிலான வனத்துறை குழுவினர் தீவிரம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி,சுப்புலாபுரம்- டி.புதூர் கிராமத்திற்கு செல்லும் சாலையிலுள்ள மலைப்பகுதியில் இருந்து திடீரென இறங்கி வந்த கரடி ஒன்று ஊரை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் புகுந்த பணி செய்தவர்களை விரட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அச்சமடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சத்தமிட்டதையடுத்து அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி கரடி மறைந்து கொண்டது இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள் தலைமையிலான வனத்துறை குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து மலையடிவாரப்பகுதி மற்றும் காட்டுப்பகுதிகளில் கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரி கூறும் போது கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் ஒரு குழுவினர் தேடும் பணிக்கு வரவிருப்பதாகவும் மலையடி வரப்பகுதிகளில் கரடி தென்படும் பட்சத்தில் மயக்க ஊசி செலுத்தும் மருத்துவர் தயார் நிலையில் இருப்பதோடு பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு கூண்டு மூலம் மயக்க ஊசி செலுத்தி விரைவில் கரடியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மலைப்பகுதியில் இருந்து இறங்கி வந்த கரடி கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலப்பகுதிக்கு வந்ததால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.